மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க15 கோடி ரூபாய் பேரம்

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா 15 கோடி ரூபாய் வரை குதிரை பேரம் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் பாஜக கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 8ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குஜராத்தில் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 6 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியை விட்டு விலகிய நிலையில் மேலும் பல எம்.எல்.ஏக்களுக்கு 15 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசின் அனைவரும் சொந்த ஊர் திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார். குஜராத் முதல் அமைச்சர் விஜய் ரூபானி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பல எம்.எல்.ஏக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் சிலருக்கு பணத்தாசை காட்டப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக வெள்ளத்தால் மாநிலம் தத்தளிக்கும்போது நிவாரணப்பணிகளை கவனிக்காமல் எம்.எல்.ஏக்கள் பெங்களூரில் உல்லாசமாக இருப்பதாக சாடியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன