மாநகராட்சி குப்பை லாரியில் திடீர் தீ

சென்னை கோயம்பேட்டில் மாநகராட்சி குப்பை லாரி திடிரென தீப்பிடித்து எரிந்தது. கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் பகுதியில் திடீரென புகை வெளிவந்தது. இதையடுத்து லாரியை நிறுத்திய ஓட்டுனர் உடனடியாக வெளியேறினார்.

இன்ஜின் பகுதியில் பரவிய தீ, மளமளவென லாரியின் முன்பக்கம் முழுவதும் பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், குப்பை லாரியின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து நாசமானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!