மாநகராட்சி ஊழியரை மீண்டும் பணியமர்த்த லஞ்சம்

சென்னை மாநகராட்சி ஊழியரை மீண்டும் பணியமர்த்துவதற்கு லஞ்சம் வாங்கிய, சிறந்த சுகாதார ஆய்வாளர் விருது பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மணலி மண்டலத்தில் 19வது வார்டில் ஒப்பந்த தொழிலாளியான சரவணன், சரியாக பணிபுரியாத காரணத்திற்காக இடை நீக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பணி வழங்க சுகாதார ஆய்வாளர் பாலன், உதவியாளர் லட்சுமிபதி ஆகியோர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்து விட்டு, லஞ்சப்பணத்தை சரவணன் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அதிகாரிகள் பாலன் மற்றும் லட்சுமிபதியை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கைதான பாலன், சிறந்த சுகாதார ஆய்வாளர் விருதை சுதந்திர தினத்தன்று பெற்றவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!