Advertisement

மாத்திரை விழுங்கப்பட்டதா? கண்காணிக்க சென்சாருடன் கூடிய மாத்திரைக்கு அமெரிக்காவில் அனுமதி

அமெரிக்காவில் டிஜிட்டல் சென்சாருடன் கூடிய புதிய மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் பரிந்துரைத்தவாறு நோயாளி மாத்திரையை எடுத்துக்கொண்டாரா? என்பதை கண்காணிக்கும் சென்சாருடன் கூடிய எபிலிஃபை மைசைட் என்ற மாத்திரையை ஒட்சுகா என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படும் ஒருவர் தனது உடலில் இதற்கான டிஜிட்டல் பட்டை ஒன்றை அணிய வேண்டும்.

விழுங்கிய மாத்திரையில் உள்ள சென்சார் முதலில் உடலில் உள்ள பட்டைக்கும் பின்னர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள உறவினர் அல்லது மருத்துவரின் ஸ்மார்ட் ஃபோனுக்கும் மாத்திரை எடுத்துக்கொள்ளப்பட்ட தகவலை உடனடியாக வழங்கும். சீசோஃப்ரீனியா எனப்படும் மனரீதியிலான பிரச்சினைக்கு இந்த மாத்திரையைப் பரிந்துரைக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன