மாணவர்களும் பொதுமக்களும் உருவாக்கிய விதைப்பந்துகள்

வேலூர் மாவட்டம், நேதாஜி விளையாட்டரங்கில் அகில இந்திய மாணவர் பொதுநல சங்கத்தின் சார்பில் விதைப்பந்துகளை வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் மரங்களை வளர்க்கும் நோக்கத்தோடு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்களின் உதவியோடு 2 லட்சத்து 50 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கப்பட்டது. மாணவர் சங்க செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் விதைப்பந்துகளை வழங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், திரைப்பட இயக்குநர் சமூத்திரக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *