மழை வளம் பெற வேண்டி கஞ்சிக் கலையம் சுமந்து வழிபாடு

தமிழகத்தில் வறட்சி நீங்கி மழை வளம் பெற வேண்டி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பெண்கள் கஞ்சிக் கலையம் சுமந்து வழிபாடு நடத்தினர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா நடைபெறும்.

பனிரெண்டாவது ஆண்டாக வேடசந்தூர் சாலைத்தெருவில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை உடுத்தி, கஞ்சிக் கலையம் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர். RH காலனி, வடமதுரைரோடு, கடைவீதி என முக்கிய பகுதிகள் வழியாக அவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போது மேளதாளங்கள் முழங்க சில பெண்கள் ஆடி மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன