மலையாள நடிகர் திலீப் ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல்

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைதான மலையாள நடிகர் திலிப், இன்று ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, 3 நாள் போலீஸ் காவலில் இருந்த திலீப், சனிக்கிழமையன்று அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கோரி, அவரது சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன