மர்மமான முறையில் உயிரிழந்த ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக புகாரையடுத்து, 20 நாட்களுக்குப் பிறகு உடல் தோண்டியெடுக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, புதைக்கப்பட்ட அவரது சடலம் 20 நாட்களுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூரைச் சேர்ந்த வின்செண்டுக்கும், திருக்கோவிலூரை அடுத்துள்ள அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியையான அந்தோணிகிருஸ்தாள் என்பவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 21ஆம் தேதி அந்தோணிகிருஸ்தாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் அவர்கள் செல்வதற்குள் வின்செண்டின் உறவினர்கள், அந்தோணிகிருஸ்தாளின் உடலைப் புதைத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அந்தோணிகிருஸ்தாளின் பெற்றோர், அவர் வரதட்சணைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து புதைக்கப்பட்ட அந்தோணிகிருஸ்தாளின் உடலை 20 நாட்களுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்டு, உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன