மர்மக்காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி உயிரிழந்ததால், சுகாதாரத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேற்கு செய்யூரைச் சேர்ந்த வர்ஷா என்ற அந்தச் சிறுமி, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மேற்கு செய்யூரில் சுகாதாரச்சீர்கேடு நிலவுவதால், அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!