மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனையில் தீ விபத்து – உயிர்ச் சேதம் தவிர்ப்பு

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள King George’s மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

ஆறுமாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீயினால் ஜன்னல்கள் வழியாக கரும்புகை வெளியேறத் துவங்கி கட்டடத்தை ஆக்கிரமித்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த 150 நோயாளிகளும் பத்திரமாக வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன