Advertisement

மருத்துவமனை குடிநீரில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி – சட்டமன்ற உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மற்றும் உள்நோயாளிகளுக்கு உணவு பற்றாகுறையை கண்டித்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் உள்நோயாளிகளுடன் செயல்பட்டுவரும் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மற்றும் உள்நோயாளிகளுகக்கு முறையாக உணவுபொருட்கள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு குடிநீரில் புழுக்கள் இருந்ததை கண்ட அவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து வந்த காவல் நிலைய ஆய்வாளரும், தலைமை மருத்துவரும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடபட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன