Advertisement
Advertisement

மரியா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மரியா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள எம்பையர் கட்டிடத்தில் வண்ண விளக்குகள் ஒளிர விடப்பட்டன.

கரீபியன் தீவான டொமினிகாவை புரட்டிப்போட்ட மரியா புயல், அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளை பதம்பார்த்து வருகிறது. இந்நிலையில், மரியா புயலுக்கும், மெக்சிகோ நிலநடுக்கத்திற்கும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற தி எம்பையர் கட்டிடத்தில் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மெக்சிகோ, டொமினிகா உள்ளிட்ட நாடுகளின் தேசிய கொடிகளின் வண்ணங்களும் கட்டிடத்தில் மின்னின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன