Advertisement

மயானத்தில் தேங்கியிருக்கும் கழிவு நீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மயானத்தில் தேங்கியிருக்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேரு நகர் 20வது வார்டு பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுற்றிலும் வசிக்கும் மக்களின் வீட்டுக் கழிவுகள், மழைநீர் என மயானத்தில் சேந்து ஏரி போல் தேங்கிக் கிடக்கிறது.

நீண்ட காலம் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் மிகுந்த துர்நாற்றத்தோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மயானத்தில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மயானத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன