Advertisement

மனைவி விட்டு பிரிந்து சென்றதே பீகார் ஆட்சியர் தற்கொலைக்கு காரணம் என தகவல்

மனைவி பிரிந்து சென்றதே, பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பக்ஷார் மாவட்ட ஆட்சியரான முகேஷ் பாண்டே, ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், எதற்காக தற்கொலை செய்தார் என்ற தகவல்கள் மர்மமாகவே இருந்தன. தற்போது இதை போலீசார் கண்டறிந்துள்ளனர். முகேஷ் பாண்டே, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவுடன் ஆயுஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் மிகப்பிரமாண்டமான முறையில் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டரை மாத பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முகேஷ் பாண்டேவை விட்டு மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுவே முகேஷ் பாண்டேவின் தற்கொலைக்கு காரணம் என்று காவல்துறை கருதுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன