மத்திய அரசுக்கு அடிமையாக இல்லை;இணக்கமாக உள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி

டிடிவி தினகரன் திமுகவுடன் சேர்ந்து ஆட்சியையும் கட்சியையும் கவிழ்க்க நினைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். ஆட்சி நீடிக்காது என நினைத்தவர்களின் எண்ணத்தை உடைத்து ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக அவர் கூறினார். திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் சிலரது முயற்சி பலனளிக்காது என்றும் தெரிவித்தார்.

துரோகிகளுக்கு ஜெயலலிதா ஆண்டவன் ரூபத்தில் தக்க பதிலடி கொடுப்பார் எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தாங்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இல்லை என்றும், மாநில அரசின் நலத்திட்டங்களுக்கு நிதி பெற இணக்கமாக இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 29 ஆயிரத்து 107 பயனாளிகளுக்கு 903 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!