மதுரையில் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது விமானநிலைய சுற்றுச்சுவர்

மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவர் 30 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. மதுரையில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக மதுரை விமான நிலையத்தின் 3வது வாயில் கதவு அருகே தண்ணீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் இன்று காலையில் 30 அடி நீளத்திற்கு விமான நிலைய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இடிந்து விழுந்த சுவர் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், தமிழக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தற்காலிகமாக வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு இரு வாரத்தில் சுவர் புதிதாக கட்டிமுடிக்கபடும் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன