மதுரையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பு

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழகர்கோவில் – மேலூர் சாலையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது டிடிவி தினகரன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக்கூடும் என்பதால் அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன