மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடியை அடுத்த கீரமங்கலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மதுக்கடையை மூட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை மூடப்படுமென அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து போரட்டம் கைவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன