Advertisement

மதராசாவில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு திடீர் வாந்தி – மயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதராசாவில் தங்கி பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி – மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கொத்துர் என்ற கிராமத்தில் இயங்கி வரும் மதராசாவில் 5 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் இருந்து வழங்கப்பட்ட உணவுகளை, மாணவர்கள் இன்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஏராளமான மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன