பள்ளி மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம் – சிகிச்சை அளிக்காததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 14 பள்ளிக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள கரியமாணிக்கம் ஊராட்சியை சேர்ந்த 14 மாணவர்களுக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த 14 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன