Advertisement
Advertisement

மணிக்கு 400 கி.மீ வேகத்தில் செல்லும் Tesla Roadster

உலகின் அதிவேகமாக செல்லக் கூடிய ஸ்போர்ட்ஸ் காரை டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மின்சாரக் கார்கள் தயாரிப்பு ஆகியவற்றில் புதுமையைப் புகுத்தி வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்க். இவரது நிறுவனமான டெஸ்லா தற்போது தயாரித்துள்ள ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் அனைவரது ஆவலையும் தூண்டியுள்ளது.

இந்தக் காரில் 200 கிலோ வாட் பேட்டரி இருப்பதால் ஒரு முறை மின்னேற்றம் செய்தாலே ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம், இரண்டு நொடிக்குள்ளாகவே காரின் வேகம் 90 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடும். இந்தக் காரின் உட்சபட்ச வேகம் மணிக்கு 400 கிலோ மீட்டர் ஆகும். காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய். 2020 ஆம் ஆண்டு டெஸ்லா ரோட்ஸ்டெர் கார் சந்தைக்கு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன