Advertisement

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.8,685 ஆக உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் மஞ்சளின் விலை குவிண்டால் ஒன்றுக்கு 8,500 ரூபாயாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் விற்பனை கூடங்கள் மூலம் மஞ்சள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் உள்ள மஞ்சள் சந்தைகளுக்கு வரும் 16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி, ஞாயிறு உள்பட மொத்தம் 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், மஞ்சள் கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக விரலி மஞ்சள், குவிண்டாலுக்கு ஒரே நாளில் 1,136 உயர்ந்து, 8,685 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் கிழங்கு மஞ்சள் ஒரே நாளில் 408 ரூபாய் விலை உயர்ந்து 7,911 ரூபாய்க்கும் விற்பனையானதால், மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன