மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க பிரியங்கா வேண்டுகோள்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி போன்ற தத்தெடுத்த மகன்கள் தேவையில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். ரேபரெலியில் வெள்ளிக்கிழமை நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் பங்கேற்று உரையாற்றினர். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசம் தம்மை மகனாக தத்தெடுத்ததாக பிரதமர் மோடி கூறியதாக குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச வளர்ச்சிக்கு சொந்த மகன்களாக ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் இருக்கும் போது, தத்தெடுத்த மகன்கள் தேவையா? என்று அவர் கேள்வி எழுப்பினார். வாக்குறுதிகளை நிறைவேற்றாத நபர்களை தவிர்த்து, மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்கவும் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன