மக்களின் கருத்தறியாமல் அரசு எந்த முடிவும் எடுக்கக் கூடாது – கிரண்பேடி

மக்களின் கருத்தறியாமல் அரசு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் பொறுப்பேற்றது முதல் வளமான புதுச்சேரிக்காக இணைந்து பாடுபடுவோம் எனக்கூறி வருவதாகவும், நிர்வாகி என்ற முறையில் தவறுகள், குறைபாடுகளை சீராக்க வேண்டியது தனது கடமை என்றும் கிரண்பேடி சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் மக்களின் பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு தான் என்றும், அரசின் தவறான அல்லது சரியான முடிவுகளால் மக்களின் வாழ்க்கை மாறி விடும் என்றும் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன