Advertisement

ஷீரடி சாய்பாபா கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு

அதிமுக இரு அணிகளும் இணைப்பு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தமிழ்நாட்டில் அரசியல் நிலைமை சூட்டைக் கிளப்பி வரும் நிலையில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்ட்ரா மாநிலம் ஷிர்டியில் சாய்பாபா ஆலயத்தில் தரிசனம் செய்தார். டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் சந்தித்துப் பேசவில்லை.

இதனிடையே, டெல்லியில் இருந்து மும்பை நோக்கி பயணித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ஷிர்டி சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அவருடன் மைத்ரேயன் உள்ளிட்டோரும் சென்று தரிசனம் செய்தனர்.

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்ட பன்னீர்செல்வம் தமிழக மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
முன்னதாக அவர் சனி சிங்கனூர் கோவிலுக்கு சென்று சனீஸ்வரன் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன