மகளிர் கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட வேண்டும் – மிதாலி ராஜ்

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளார். 2017 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின், மகளிர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பச் செய்து மக்களைப் பார்க்கச் செய்தால் விளையாடுவதற்கும், திறமையை அதிகரித்துக்கொள்ளவும் மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு ஆர்வம் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

உலகக் கோப்பை போட்டிக்குப் பின் மகளிர் அணியினர் டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட அதிக அளவிலான போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாகவும், ஐ.சி.சி. மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன