போர் மொழியில் பதில் சொன்னால் மட்டுமே சீனாவுக்கு புரியும்: பாபா ராம்தேவ்

டோக்லம் விவகாரத்தில் சீனாவுக்கு போர்மொழியில் பதில் சொன்னால் மட்டுமே புரியும் என்று பாபாராம் தேவ் கூறியுள்ளார். மும்பையில் உலக அமைதி ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. இதில் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, பாபா ராம் தேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய தலாய் லாமா டோக்லம் பிரச்சினை தீர்வு காண முடியாத அளவுக்கு தீவிரமானது என தாம் கருதவில்லை என்று கூறினார். பயம் எரிச்சலையும், எரிச்சல் கோபத்தையும், கோபம் வன்முறையையும் தூண்டும் என்று தெரிவித்த அவர் டோக்லம் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு கண்டுவிட முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

அப்போது பேசிய பாபா ராம் தேவ் சீனாவுக்கு அமைதி வழியில் நம்பிக்கை இல்லை என்று கூறினார். சீனாவுக்கு போர் மொழி மட்டுமே புரிகிறது என்பதால் அந்த மொழியிலேயே பதிலளிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன