Advertisement

போர்ச்சுக்கல் – அலைச்சறுக்கு போட்டியில் சாகசம் காட்டிய வீரர்கள்

போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அலைச்சறுக்குப் போட்டியில், வீரர்களின் சாகசத்தை பார்வையாளர் வியந்து ரசித்தனர்.

PENICHE என்ற கடற்கரை நகரில் நடந்த இப்போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் சீற்றம் காட்டிய அலைகளின் மீது, போட்டியாளர்கள் சாமர்த்தியமாக பயணித்து சாகசங்களை அரங்கேற்றினர்.

வீழ்த்தி விட துடித்த அலைகளுக்குப் போட்டியாக விரைந்து செயல்பட்ட அவர்களது, அலைச்சறுக்கு நுட்பத்தை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன