Advertisement

போபாலில் மண்பாதையில் ஜீப் ஓட்டிச் செல்லும் சாகசப் பந்தையம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மண்பாதையில் ஜீப் ஓட்டிச் செல்லும் சாகசப் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜீப் மற்றும் ஜிப்ஸி வாகனங்கள் கலந்துகொண்டன. மொத்தமுள்ள 120 கிலோ மீட்டர் பந்தய தூரத்தில் 90 கிலோமீட்டர் தூரம் மண் பாதையிலும் மீதமுள்ள 30 கிலோ மீட்டர் தூரம் சேறு, சகதி, மற்றும் செயற்கையான தடைகளைக் கடந்து போட்டியாளர்கள் ஜீப் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது விதிமுறை.

இந்த சாகசப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு சர்வதேசத் தரத்திலான பயிற்சியும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மோட்டார் கார் பந்தையங்கள் வேகமாக முன்னேறி வருவதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன