போனில் சேட்டிங் செய்தபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், டிராம் வண்டி மோதி காலை இழந்தார்

உக்ரைனில் செல்போனில் சேட்டிங் செய்தபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், டிராம் வண்டி மோதி தனது காலை இழந்தார். கர்கிவ் (kharkhiv) பகுதியில் 40 வயதான பெண் ஒருவர் தமது செல்போனில் சேட்டிங் செய்தபடியே, தண்டவாளத்தைக் கடந்தார். சிவப்பு விளக்கையும் மதிக்காமல், சென்ற அவர் மீது வேகமாக வந்த டிராம் வண்டி மோதி, தரதரவென இழுத்துச் சென்றது.

டிராம் ஓட்டுநர் சுதாரித்து வண்டியை நிறுத்தியதால் அந்த பெண் உயிர்பிழைத்தார். இருப்பினும், கவனக்குறைவாக இருப்புப் பாதையைக் கடந்த அந்த பெண் தமது வலது காலை இழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன