Advertisement

போதைப் பொருள் கடத்தியதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர் குடும்பத்துடன் சுட்டுக் கொலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்திய போது போலீசாருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மேயர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள ஒஸாமிஸ் (Ozamiz)நகர மேயராக இருந்தவர் ரொனால்டோ பரோஜினோக் (reynaldo parojinog), இவர் தனது வீட்டில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலையடுத்து அங்கு சோதனை நடத்த போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை வீட்டுக்குள் அனுமதிக்க மேயர் ரெனால்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரொனல்டோ அவரது மனைவி, சகோதரர் உள்பட 11பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

தொடர்ந்து மேயர் வீட்டிலிருந்து ஏராளமான போதைப் பொருட்களும், அனுமதி பெறப்படாத துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன