போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சரியான நேரத்தை காட்டும் வழிகாட்டி – கூகுள்

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க சரியான நேரத்தை தேர்வு செய்யும் வழிகாட்டியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஃபோன்களை பயன்படுத்துவோர் கூகுள் மேப் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். தற்போது அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பயன்பாட்டில் உள்ள இந்த வசதியின் மூலம் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொண்டு பயணத்தை தொடங்க முடியும்.

குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு பயணத்தைத் தொடங்கினால் எந்தப் பாதையில் எவ்வளவுதூரம் செல்லவேண்டியிருக்கும் என்பது மட்டுமன்றி, எந்த நேரத்தில் பயணத்தைத் தொடங்கினால் போக்குவரத்து நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்கள் பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு நிற இன்டிகேட்டர்கள் மூலம் விளக்கப்படுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன