போக்குவரத்திற்கே அருகதையற்ற குண்டும் குழியுமான சாலை – கிராம மக்கள் வேதனை

திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நிகழும் அபாயம் உள்ளதாகவும் சாலையை உடனடியாக சீரமைத்துத் தருமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்னர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்-உடன்குடி இடையிலான பிரதான சாலையில் நா.முத்தையாபுரம் கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாய கிராமமான இப்பகுதியில் சாலைகள் குண்டு குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளன.

இப்பகுதி வழியாக தினமும் அரசு பேருந்துக்கள், தனியார் கல்லூரி பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பேருந்துக்கள் நா.முத்தையாபுரம் பகுதியில் உள்ள படு மோசமான சாலையைக் கடக்க கூடுதல் நேரம் ஆவதாகக் கூறப்படுகிறது. இந்த சாலையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியரும் இந்த மோசமான சாலையை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாலையை சீரமைத்துத்தருமாறு இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவே இல்லை என்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக சீரமைத்துத் தரவேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!