போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு மீது மீண்டும் விசாரணை

போஃபர்ஸ் ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என பாஜக தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, கடந்த 1986ஆம் ஆண்டு சுவீடனின் போஃபர்ஸ் பீரங்கிகள் கொள்முதலில் பேரம் பேசப்பட்டு ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி இடைத்தரகராக செயல்பட்டதாகவும், போஃபர்ஸ் நிறுவனம் 64 கோடி ரூபாயை இந்திய அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கியதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த 2005ஆம் ஆண்டு போஃபர்ஸ் நிறுவனம் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹிந்துஜா சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

இதையடுத்து, மேல்முறையீடு செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதிக்காததால், இந்த வழக்கு முடங்கிப் போனது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு வரும் என பாஜக தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன