பொலிவியா – காட்டுத்தீயில் 7,000 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரையானது

பொலிவியாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 7,000 ஹெக்டேர் பரப்பளவிலான வனப் பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.

அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர். ஒரு போலீஸ் பயிற்சி மாணவரும் கிராமவாசியும் இந்த தீவிபத்திற்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் பணியில் ராணுவ வீரர்களும் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தரைப்பகுதியில் இருந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐந்து ஹெலிகாப்டர்கள் ((Tarija)) தரிஜா நகரை ஒட்டிய மலைப்பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!