பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் இந்தாண்டுக்கான பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைத்துள்ள 15 ஆயிரத்து 737 இடங்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இன்றும் நாளையும், ப்ளஸ் 2 -வில் Vocational Group எடுத்து படித்த தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி, மாற்றுத்திறனாளி பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆறாயிரத்து 224 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோக மீதமுள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 419 இடங்கள் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

19 மற்றும் 20 -ம் தேதிகளில் விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்கப்படுகின்றன. இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ம் தேதி நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 23 – ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

ஏற்கனவே வராமல் போனவர்களுக்கான துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ம் தேதி நடத்தப்படும். இதற்காக விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய நாள் ஆகஸ்ட் 16-ம் தேதியாகும். அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களில் ஆதிதிராவிட இனத்தவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18-ம் தேதியன்று நடத்தப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன