பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் – HSBC நிறுவனம்

2028ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என்று பிரிட்டனின் பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனமான HSBC தெரிவித்துள்ளது.

உறுதியான சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதுடன், கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட சமூகத் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது சாத்தியம் என்று அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக திட்டங்களுக்கான மூலதனம் மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக கூறியுள்ள HSBC, தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி தருவதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதை செய்தால், இன்னும் 10 ஆண்டுகளில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார வளர்ச்சியில் இந்திய மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்று HSBC ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!