ரேசன் விநியோகத்தில் மத்திய அரசு விதிமுறைகள் தமிழகத்திற்கு பொருந்தாது – காமராஜ்

மத்திய அரசின் பொது வினியோகத் திட்டத்திற்கான விதிமுறைகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்றும், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த சில சலுகைகளை தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டு பெற்றதாகவும், தமிழக அரசின் வேண்டுகோள் ஏற்கப்பட்ட பிறகுதான் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு திட்டத்தில் மத்திய அரசின் விதிமுறைகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேசன் பொருட்கள் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ரேசன் பொருள் விநியோகத்தில் மாற்றம் என்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன