பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களை வசூலிக்க 2019 வரை கெடு

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனாக இருக்கும் 8 லட்சம் கோடி ரூபாய் தொகையை ஈடு செய்வதற்கு அடுத்த ஆண்டு வரை அவகாசம் தர ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.2019ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் வாராக்கடன்களை வசூல் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.வங்கிகளின் நிதி வலிமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அசோசாம் நிதியமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கணக்குகளில் மட்டும் வாராக்கடன்களின் 25 சதவீதத் தொகை முடங்கிக்கிடப்பதாக அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன