பைக் டாக்ஸி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டம் – நிதின் கட்கரி

மத்திய அரசு பைக் டாக்ஸி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பைக் டாக்சி முறை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமைவதுடன், பொதுமக்களுக்கு மலிவு கட்டணத்திலான ஒரு போக்குவரத்து முறையாகவும் அமையும் என்றார்.

பைக் டாக்சி முறை சில பகுதிகள் தனியாரால் நடத்தப்படுவதாகக் கூறிய அவர், அதனை அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் பைக் டாக்சி உட்பட பல்வேறு வாடகை வாகனங்களையும் தேர்வு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இது ஒரு சிறந்த வேலை வாய்ப்பாகவும் அமையும் என்றும் நிதின்கட்கரி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன