பேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டம்

குறைவான வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்தாமல் இருப்போரின் உண்மையான வருமானத்தை அறிய, அவர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்கையும் வரிமான வரித்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

கருப்புப்பணத்தை ஒழிக்கவும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், குறைவான வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்தாமல் இருப்போர் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற இடங்கள், அங்கு அவர்கள் தங்கிய விடுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புதிய வாகனங்களின் புகைப்படங்களை ஆய்வு செய்யவும் வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் உண்மையான வருமானத்தை தெரிந்து, அதன்மூலம் வரியை செலுத்த வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன