பேட்மிண்டன் வீராங்கனைகள் பட்டியலில் சிந்துவுக்கு 5-வது இடம்!

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சர்வதேச பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
சர்வதேச பேட்மின்டன் சம்மேளனம் வீரர்- வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பி.வி.சிந்து 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதுபற்றி சிந்து கூறுகையில், 5-வது இடத்தை பிடித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த வருட இறுதிக்குள் 3-வது இடத்தை பிடிப்பேன் என நம்புகிறேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சாய்னா நேவால் 9-வது இடத்தில் உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன