பெரு நாட்டில் அகழ்வாராய்ச்சி நடக்கும் பகுதியில் நேரிட்ட தீ விபத்து

பெரு நாட்டில் அகழ்வாராய்ச்சி நடந்து வந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. பாமல்கா ((POMALCA)) என்ற பகுதியில் உள்ள லம்பாயேக் ((Lambayeque)) பள்ளத்தாக்கில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான சுவர்ச்சித்திரங்கள் காணப்பட்டதாக தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

இங்கு திடீரென தீப்பற்றியதில், ஆராய்ச்சிக்காக போடப்பட்டிருந்த பந்தல்கள், மரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்கள், ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றில் நெருப்பு பற்றி எரிந்தது.அருகே உள்ள கரும்புத்தோட்டத்தில் எரிக்கப்பட்ட சருகுகளின் வழியே, அகழ்வாராய்ச்சிப் பகுதியில் தீப்பற்றியது பின்னர் தெரியவந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன