பெண் காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வில் 377 பேர் தேர்வு

பெண் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் 377 பேர் தேர்வாகி இருப்பதாக தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட 15 ஆயிரத்து 664 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே 21-ம்தேதி நடைபெற்றது. 4 லட்சத்து 82 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவுகள், கடந்த 12-ம்தேதி வெளியிடப்பட்டன. 2-ம் கட்டமாக உடல் தகுதி தேர்வு கடந்த 27-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் உள்பட 15 மையங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 530 பெண்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், 439 பேர் மட்டுமே உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 377 பேர் தேர்வாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வானவர்களுக்கு 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகளும் நடைபெற உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன