Advertisement
Advertisement

பெண்களை இழிவாக பேசியதாக பாஜக பெண் எம்பி மீது வழக்கு

பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக நடிகையும், பாஜக எம்.பியுமான ரூபா கங்குலி மீது மேற்கு வங்க காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா கங்குலி, மேற்கு வங்க பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் 15 நாட்கள் கூட வாழ முடியாது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி ரூபாய கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதனை அடுத்து மக்களை அச்சுறுத்தும் விதமாக பேசியதாவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாவும், தரம் தாழ்ந்து பெண்களை விமர்சனம் செய்ததாகவும், ரூபா கங்குலி மீது பாரக்பூர் அருகே உள்ள நிமிடா காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன