Advertisement

பெண்களுடன் ஷாப்பிங் செல்லும் ஆண்களுக்கு விளையாட்டு மையம்

சீனாவில் பெண்களுடன் ஷாப்பிங் செல்லும் ஆண்களுக்காகவே மால் ஒன்று, வீடியோ கேம் விளையாட்டு மையத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உலகளவில் பெண்கள் ஷாப்பிங் செய்யும்போது அவர்களது கணவர் அல்லது நண்பர் சிலர் சோர்ந்து போவதும், எரிச்சலடைவதும் வாடிக்கையாகவுள்ளது.

பெண்களுடன் ஷாப்பிங்கிற்கு செல்வதை தவிர்க்க முடியாத ஆண்களுக்காக ஷாங்காய்-ல் உள்ள ஷாப்பிங் மால் ஒன்று வீடியோ கேம் மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் மாலின் நுழைவிலேயே உள்ள இந்த விளையாட்டு மையத்தில், ஆண்களை விட்டுச் செல்லும் பெண்கள், ஷாப்பிங் முடித்துத் திரும்பும் வரை, அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடுவதாகவும், ஆண்களின் கஷ்டத்தை உணர்ந்ததால் இதுபோன்ற வசதி ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன