Advertisement
Advertisement

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 3 சதவீதமும், டீசல் மீதான வாட் வரியை 5 சதவீதமும் குறைத்துள்ளது. அண்மையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதேபோல பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்து, பெட்ரோல்-டீசல் விலைய குறைய வழிவகுத்தன. இந்நிலையில், பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ள மத்தியப் பிரதேச அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது.

பெட்ரோல் சில்லறை விற்பனை மீதான வாட் வரி 3 சதவீதமும், டீசல் சில்லறை விற்பனை மீதான வாட் வரி 5 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன