பெட்ரோலிய மண்டல விவகாரத்தில் திமுகவின் நிலை என்ன?: ராமதாஸ்

பெட்ரோலிய மண்டல விவகாரத்தில் திமுகவின் நிலை என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக்கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான இடங்கள் கடந்த 2007-08ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் அடையாளம் காணப்பட்டதாகவும், மு.க. அழகிரி மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சராக இருந்த போது 2012-ஆம் ஆண்டில் தான் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய மண்டலத் திட்டத்தின்படி பெருமளவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும், எண்ணெய் கிடங்குகளும் அமைக்கப்பட்டால் அந்த இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறி விடும் என்றும் அவர் புகார் கூறியுள்ளார். இப்படி ஒரு மோசமானத் திட்டத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில் திமுகவுக்கு என்ன தயக்கம்? என்பன போன்ற வினாக்களுக்கு மு.க.ஸ்டாலின் விடையளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன