பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி சோதனை

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையின் ஆண்கள் அறைகளில் நேற்று அதிரடியாக நடைபெற்ற சோதனையில் கஞ்சா உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2நாட்களுக்கு முன், கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கையா தலைமையில் 160 போலீசார் நேற்றிரவு ஒரே நேரத்தில் ஆண்கள் சிறைக்குள் சென்று ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்தனர். இந்த அதிரடி சோதனையில் கஞ்சா, மற்றும் சீட்டு கட்டுகள் உட்பட அனுமதிக்கப்படாத பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *