பூந்தமல்லி அருகே கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்தில் திடீர் தீ

சென்னை பூந்தமல்லி அருகே சொகுசு பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. பூந்தமல்லி அருகே சொகுசுப் பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றியது.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!